Friday, August 3, 2012

அணு ஆயுதமற்ற உலகிற்கான ''அமைதி நினைவகங்கள்''..........Peace Pagodas.

                                      
இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதையே,சிறப்பாக நினைத்து வந்த அந்த இளமை கால வாழ்க்கையில் இருந்து விலகியே நின்றார்,Nichidatsu Fujii [1885-1985]
குருஜி என்று அழைக்கப்பட்ட இந்த வழிகாட்டி.
தீவீ ரமான துறவு வாழ்க்கையை பின்பற்றிவந்தவர் இவர் .
நாடுகளை கைப்பற்றி அடிமைபடுத்த முயன்று வரும் வேளையில்
தமது பாதை அமைதியை நடைமுறை படுத்துவதே என்று நடை பயில தொடங்கினர்.இவரது பாதை அமைதி பயணங்களே.கையில் ஒரு சிறிய பறையை தட்டிக்கொண்டே அமைதிக்கான வார்த்தைகளை ஒலித்துக்கொண்டே சென்று கொண்டிருந்தார்.1931 இல் இந்தியா  வந்த இவர் காந்தியின் ,போராட்ட முறை பிடித்துப்போனதால் இந்தியாவோடு மிகுந்த நெருக்கம் காட்டினர்.தாம் சார்ந்து வாழும் புத்த மதமும் இந்தியாவில் தோன்றியது என்பதும் கூடுதலான ஈடுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம்.

அப்போது உலகையே போர் மேகங்கள் சூழ்ந்து,முதலாம் உலகப்போரும்,இரண்டாம் உலகப்போரும் உலுக்கி வந்தது.இதன் இறுதி கோர முகமாக
ஹிரோஷிமா,நாகசாகியில் ''அணு ஆயுதங்கள் '' தங்கள் அரங்கேற்றத்தை நிகழ்த்தி காட்டின.மனித சமூகத்தின் கொடும் முகத்தினை கண்டு உலகம் அதிர் உற்றது போன்றே தானும் அதிர்வுற்று நின்றார்.
உலகம் முழுக்க அமைதியை வலியுறுத்தி நினைவகங்கள் உருவாக்க,மதம், இனம் ,மொழி, நாடு கடந்து மக்கள் ஒன்று கூட ஒரு இடம் உருவாக்கினர்.இவர் தோற்றுவித்த புத்த வாழ்க்கை முறையின் பெயர் ஜப்பான் புத்த அமைப்பாகும்.(Buddhist religious order, Nipponzan Myohoji)




       


               

அவைதான் இந்த அமைதி நினைவகங்கள்.இவை உலகம முழுக்க இன்று கட்டப்பட்டு வரப்படுகிறது.
இவை முதன் முதலில் கட்டப்பட்டது ஹிரோஷிமா,நாகசாகியில் தான்.இந்த கட்டிடங்கள் இந்தியாவில் உள்ள ''சாஞ்சி'' புத்த நினைவிடத்தை போன்ற கட்டிட அமைப்பை பின்பற்றியே கட்டுகிறார்கள்...
ஆகத்து 6,9 ,ஆகிய தினங்களில் ஹிரோஷிமா,நாகசாகி நினைவின் வலியை உலகம் பகிந்து கொள்ளும் வேளையில்,அணு ஆயுதமற்ற உலகிற்கான ''அமைதி நினைவகங்கள்''..........கட்டும் அதே கட்டிட அமைப்பை போன்று அணுஉலைகள் கட்டி வருகிறோம்.
கூடங்குளம் ''அணுஉலை'' அணு ஆயுதமற்ற உலகிற்கான '''அமைதி நினைவகமாக'' மாற வேண்டும் என்பதே அமைதி விரும்பும் அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment