Sunday, January 1, 2012

நெகிழி நுகர்விலிருந்து விடுதலை நூல் வாங்குவதில் இருந்து தொடங்குவோம்.

நுகர்வு பண்பாட்டின் உச்சம் தான் இன்று நம்மிடையே பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கும் நெகிழி பைகள்.
அரசு மறுசுழற்சி செய்ய முடியாத இதனை தடை செய்ய வேண்டும்.அல்லது சுற்றுச்சுழல் சீர்கெடாத வகையில் மறுசுழற்சி செய்ய வேண்டும்.
ஆனால் அரசு புகை ஊதிகளில்,மதுபானத்தில் எச்சரிக்கை விளம்பரத்தை மட்டும் போட வேண்டும் என்று கட்டாயபடுத்தி விட்டு,விற்பனையை அதிகப்படுத்தவே
செய்கிறது.அதே மனப்பான்மையை தான் நெகிழி விடயத்திலும் செய்கிறது.எனவே மக்களாகிய நாம் தான் இதிலிருந்து விடுதலை பெற்றாக வேண்டும்.
இதற்கான முதல் செயலாக ''புத்தக கட்சியில் ஒன்று கூடும் அனைவரும்''தங்களின் சொந்த பைகளோடு வந்து நூல்களை பெற்று செல்வதில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக மற்ற அனைத்து நுகர்வு செயலின் போதும் தொடர வேண்டும்.



                                 Dinamani-Chennai Edition.12-12-2011.