Monday, August 27, 2012

''தக்கோலம்'' ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் .........



தக்கோலம்.இது வரலாறு கடந்து போன பாதையில் அமைந்திருக்கும் ஊர்களில் இதுவும் ஒன்று.  இராட்டிரகூடர்களும்,சோழர்களும் போர்க்களம் கண்ட பகுதி.காஞ்சிபுரத்திற்கும்,அரக்கோணத்திற்கும் இடையே அமைந்திருக்கிறது   தக்கோலம். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒருபேரூராட்சி ஆகும். ஆயிரம் ஆண்டுகளை கடந்து தன் பெயரில் ஒரு வரலாறை தாங்கி தங்கியிருக்கும் ஊர். 
இன்றும் நமக்கு அருகில் இருக்கிறது என்ற ஆவலில் ஒரு நாள் 
பயணமானோம்.அந்த ஊர் போகும் வரை அந்த ஊரை பற்றி சில பிம்பங்கள் இருந்ததது.ஆனால் அந்த ஊரில் வரலாற்று தடயமாக எதையும் நம்மால் காண முடியவில்லை.பெரும்பான்மையோரிடமிருந்து நமக்கான பதிலை,அடையாளங்களை தேடி பெற முடியவில்லை.இறுதியாக ஒரு ஓய்வு பெற்ற  ஆசிரியரிடமிருந்து மட்டுமே பதில் கிடைத்தது.கல்லும்,மணலும் கொண்ட மேட்டு பகுதி இருந்தது,அதுவும் இப்போது விவசாய நிலமாக மாறிவிட்டது என்றார்.பழமையான ஜலனாதீஸ் வரர் கோவிலை மட்டுமே பார்த்து வர முடிந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போர் நடந்த இடத்தில் இன்று ஒன்றும் இருக்க வாய்ப்பிலாவிட்டலும்,ஆயிரமாண்டுகள் அகவையுடைய ஊரினை,வரலாறில் எழுத்துக்களாய் படித்த ஊரை பார்த்த ஒரு மகிழ்வில் திரும்பினோம்.

கொஞ்சம் வரலாறு..........

தக்கோலப் பெரும் போர் கி.பி. 949ஆம் வருடம் வேலூர் மாவட்டத்திலுள்ள தக்கோலம் என்னும் ஊரில் நடைபெற்றது. இந்தப் போரில் இராஜாதித்யர் தலைமையிலானமுதலாம் பராந்தக சோழரின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னரதேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின.   மிகவும் கொடூரமாக நடந்த இப்போரில்  சோழ இளவரசர் இராஜாதித்யர் கொல்லப்பட்டார். இதனால் சோழர் படை தோல்வியுற்றது.



                                                 

1 comment:

  1. இது தக்கோலத்தைப் பற்றிடய ஒரு நிலைமை இல்லை. தமிழனின் பேர் சொல்லும் எல்லா சரித்திர மையங்களும் இதுபோலவே தான் யாருக்கும் தெரியாமல் அழைந்து கொண்டு இருக்கின்றன.
    பல போர்களங்களின் வென்ற ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் போன்றோரின் நினைவிடங்கள் எது என்பதே ஒரு பெரிய கேள்விக்குறியதாக இருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இங்குதான் ராஜராஜனின் நினைவிடம் ஒருக்கிறது என்று சொல்கிறார்கள். அங்கு பயிர் நிலத்தின் நடுவே ஒரு லிங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. லிங்கத்தைக் தவிர அங்கு எதுவுமே இல்லை. தஞ்சைப் பெருங்கோவில் கட்டுவித்த ஒரு மாமன்னனின் நினைவிடத்தை அவனுக்கு இணையான சிறப்புகொண்ட ராஜேந்திர சோழன் இப்படி விட்டுவிட்டு இருப்பானா அல்லது அவன் கட்டுவித்த நினைவிடம் பின்னாளில் வந்த மற்றவர்கள் அழித்துவிட்டனரா? இதெல்லாம் ஆராயவேண்டிய பிர்ஸ்னங்கள். அதுமட்டுமின்றி சோழப்பேரரசின் ஒரு சிறந்த ராஜதந்திரியான பெண்மணி குந்தவைப் பிராட்டியாரின் நினைவிடமும் எங்கு இருக்கின்றது எனத் தெரியவில்லை. அதன் விளைவு இன்று ஒரு கும்பல் தம் கடைசி காலத்தில் குந்தவைப் பிராட்டியார் சமயபுரத்தில் ஹிந்து மதத்தை தியாகம் செய்துவிட்டு இஸ்லாமியர் ஆக மதம் மாறிவிட்டார் என்றும் அவரது நினைவிடம் தஞ்சை ஜில்லாவில் ஒரு தர்காவில் இருக்கின்றது என்றும் ஒரு கும்பல் கூறிக்கொண்டு இருக்கின்றது. எது உண்மை? கி பி 1006இல் தமிழ்நாட்டில் இதுஒஓன்ற இஸ்லாமிய மதமாற்றங்கள் இருந்தனவா? இவ்வளவு பெரிய அளவில் ஒரு சாம்ராஜ்யத்தின் பெருந்தலையான ஒரு இளவரசியார் மதம் மாறினார் என்று மேற்போக்காகச் சொல்லிவிட்டால் அதற்குண்டான சான்றூகள் எங்கே? இவை ஆராய்ந்து பதிப்பிக்கப்பட்டு இருக்கின்றனவா?

    ReplyDelete