Friday, August 17, 2012

குயிலின் குரல் இலக்கியமானது...........

               
பெரும்பாவலர் 'பாரதியார்' எழுதிய 'குயில் பாட்டு' யாவரும் அறிந்ததே.இதை புதுவையில் இருக்கும் பொது தான் இயற்றினார்.ஒரு படைப்பு உருவாவதற்கு சூழல் பெரும்பங்கு ஆற்றுகிறது.அது நமது பாவலரின் படைப்புக்கு முற்றிலும் ஒத்துப்போகிறது.    'பாரதியார்' எழுதிய 'குயில் பாட்டு' உருவானதே குயில் தோப்பில் தான்.
அந்த குயில் தோப்பு,புதுவையின் புறப்பகுதியாக இருந்த கருவடிக்குப்பம் ஆகும்.தற்போது கிழக்கு கடற்கரை சாலை (புறவழிச் சாலையில்) உள்ளது.இப்போது அங்கே குயில் தோப்பு இல்லை.சித்தர்; சுவாமி சித்தானந்தா சுவாமிகளின் வளாகத்தில் தான் முன்னர் குயில் தோப்பு இருந்தது.இப்போது பாரதியார் இயற்றிய அவ்விடத்திற்கு நினைவாக ஒரு சிலை வைக்கப்பட்டு உள்ளது.அங்கே சுவாமி சித்தானந்தா சுவாமி களை வழிபட வருபவர்கள்,எத்தனை பேருக்கு இது தெரியும் என தெரியவில்லை.

   அன்று  குயில்கள் இருந்தன,தோப்பு இருந்தது.ஒரே வகையான மரங்களின் தொகுப்பிற்குத்தான் தோப்பு என்று மரங்களின் பெயர் வரும்.
  பறவைகளின் பெயரில் தோப்பு அமைந்திருக்குமானால்,அன்று அது எத்தகைய தோப்பாக இருந்திருக்கும்.
 அது பாரதியை வரவேற்றிருக்கிறது.தன் பெயரில் கவி பாட'' வைத்திருக்கிறது.இன்று குயில் தோப்பும் இல்லை .குயில்களும் இல்லை.
 பெரும் குரலில் பாடிய பாரதியும் இல்லை.ஆனாலும் குயில் பாட்டு,தமிழின் குரலாக ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.  
குயிலின் குரல் இலக்கியமானது........... 

No comments:

Post a Comment