Thursday, August 16, 2012

அலிப்பூர்,கான்பூர் .....திருமால்பூர்.



                                          

காஞ்சிபுரத்திலிருந்து ,அரக்கோணம் செல்லும் பாதையில் நண்பரோடு இருசக்கர பயணமாக சென்று கொண்டிருந்தோம்.நல்ல தமிழ் தாங்கிய பெயர் பலகைகளே கண்ணில் பட்டுக்கொண்டு வந்தது.ஒரு பெயர் பலகை ''திருமால்பூர்'' என்று கண்ணில் பட்டது.வட நாட்டில் பல ஊர் பெயர்களுக்கு அலிப்பூர்,கான்பூர் .  ''பூர்'' என்று முடிவதுண்டு.தமிழில் 'ஊர்'
என்றுதான் பெரும்பான்மை முடியும்.இப்படியாக பேசிக்கொண்டு செல்லும் போது,  ''ஊர்'' என்று மட்டுமே முடியவேண்டுமனால் ,திருப்பூரில் எப்படி ''பூர்'' என்று வந்தது என்றார் நண்பர்.ஆமாம் எப்படி வந்தது ..என்று பேசிக்கொண்டே கடந்தோம்.ஆனால் அந்தப்பேச்சை எங்களால் கடக்க முடியவில்லை.திடீரென்று நண்பரே சொன்னார் .யாராவது நம்மாளுங்க  
 'ராஜ்கபூர்,அனில் கபூர்'' என்று வடநாடு ரசிகசிகாமணிகள் யாராவது இந்த வேலையை செய்திருப்பார்கள் என்றார்.நடுவணரசு  புகைவண்டி பலகையிலும் அப்படியே இருந்தது.பொதுப்பணித்துறை 'திருமால்பூர்'ஏரி..என்றே குறிப்பிட்டு இருந்தது.
நாம் சென்ற வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.அட வாப்பா..இங்கிருந்து மூன்று கல் தொலைவு தான் சென்று பார்த்து விட்டு,திருமால் கோவிலையும் பார்த்து விட்டு வரலாம் என்றார்.சரி ''இவ்வளவு தூரம் வண்டி  விட்டோம்,இன்னும் கொஞ்சம் விடுவோம்'' என்று வண்டியை செலுத்தினோம்.  
அங்கே தான் அதிர்ச்சி காத்திருந்தது ..அந்த ஊரின் பெயர் ''திருமாற்பேறு'' ..அதாவது , திருமால், இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், ஆதலின் 'மாற்பேறு ' என்னும் பெயர் பெற்றது.அதுதான் ''திருமாற்பேறு''-திருமால்பூர் என்று மாற்றிவிட்டான் தமிழன்.
அட விடப்பா..பேர் பெற்ற நம்ம தமிழன் யாரோ ''பார்'' மயக்கத்துல ''பேறு'' என்பதை ''பூர்''என்று எழுதிவிட்டான்.நல்ல வேளை அவன் திருமால் ''போர்''என்று எழுதாமல் விட்டானே என்று ''பொறுமல்''மூச்சு விட்டோம்.
                       
  

No comments:

Post a Comment