Showing posts with label Solar electrification.Ambattur-Uppukkaramedu.. Show all posts
Showing posts with label Solar electrification.Ambattur-Uppukkaramedu.. Show all posts

Monday, February 6, 2012

சூரிய மின்சாரத்திற்கு மாறிய ''அம்பத்தூர்-உப்புக்காரமேடு'' பகுதி மக்கள், 20 ஆண்டு கால இருளில் இருந்து மீட்ட மா-லெ(கம்யூ) தோழர்கள்...




சென்னை-அம்பத்தூர் ரயில் மேம்பாலத்துக்கு அருகில் உப்புக்காரமேடு என்று ஒரு பகுதி சாலையோரமாகவே இருக்கிறது.முன்பொருகாலத்தில் இங்கே தான் உப்பு விற்கப்பட்டதாம்,அதனால் இதற்கு "உப்புக்காரமேடு"என்று பெயர்ககாரணம்  கூறினார்கள்.இங்கே 60 குடும்பங்கள் 50 வீடுகள் உள்ளது.அனைவருமே அன்றாடம் அருகில் உள்ள 
பகுதிக்கு ஏதோ ஒரு கூலி வேலைக்கே செல்கிறார்கள்.அனைத்து வயது மக்களும் இங்கே 20 ஆண்டுக்கு மேல் வசித்து வருகிறார்கள். இந்த இடம் ரயில் துறையினருக்கு சொந்தமானதாகும்.எனவே இவர்களுக்கு "பட்டா" எதுவும் கிடையாது.இதற்கு நேர் எதிரேவும் ரயில் துறையினருக்கு  சொந்தமான இடம் இருக்கிறது,இப்பகுதியில் ஓரளவுக்கு வசதி கொண்ட மேட்டு குடியினரே வசித்து வருகின்றனர்.இவர்கள் அனைத்து வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். 

உப்புக்காரமேடு'' பகுதி மக்களுக்கு குடும்ப அட்டை" வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.ஆனால்,அடிப்படை வசதிகள் வேறு எதுவும் கிடையாது.மின்சாரம் இல்லாத ஒரு இருண்ட பகுதியாகவே 20 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது.சிங்கார' ஒளிரும் சென்னையில் இப்படி ஒரு குடியிருப்பு இருப்பது மிக வியப்பாகவே இருக்கிறது.
குடிக்க குடிநீருக்கு ஒரு கைக்குழாய்' மட்டும் உண்டு.இவர்களில் பள்ளிசெல்லும் பிள்ளைகளும் உள்ளனர்.


வழக்கமாக இவர்கள் குடிமக்களாக கருதப்படாமல்,வாக்களர்களகவே' கருதப்பட்டு வந்துள்ளனர்.சூரியன் உதித்தும்,இலை மலர்ந்தும்,இங்கு இருள் மறையவே இல்லை.
அம்பத்தூர் நகராட்சிக்கு நடந்தார்கள்.காண்போரை எல்லாம் பார்த்து கெஞ்சினார்கள் ஏதும் நடக்கவே இல்லை.பட்டா இல்லை என்ற காரணத்தால்,காலம் கடத்தப்பட்டே
வந்தது,ஆனால் இது போன்றே தங்கி இருக்கும் எதிர் பகுதியில் அனைத்து வசதிகள் கண்டு,இவர்கள் புரியாமலே புலம்பி வந்தனர்.சில குடும்பங்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.முதியவர்கள்,பிணி கொண்டவர்கள்,இதையும் இழந்து விட்டால் வேறு எங்கும் செல்ல முடியாதவர்கள் அங்கயே வாழ்ந்து வந்தனர்.



இந்த நேரத்தில் தான்..இ கம்யு  (மா லெ),தோழர்களின்,தொடர்பால்,ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது.இவர்களும் போராட்டம், என்று எல்லா வகையிலும் முட்டி,மோதி பார்த்து வந்தனர்.அம்பத்தூர் பகுதி தோழர்கள் தொடர்ந்து பலரையும் சந்தித்து தீர்வுக்காக போராடி வந்தனர்.கடைசியில் ஒரு தனி ஒரு நிறுவனத்தின்  உதவியோடு,அந்த பகுதிக்கும்,அனைத்து வீட்டுக்கும் ''சூரிய ஒளி'' மின்சாரம் தரப்பட்டுள்ளது. தற்காலிக தீர்வாக இது கிடைத்துள்ளது.


இவர்களுக்கு மின்சாரம் இல்லாத போதும்,கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி இப்போதும் இயக்கப்படாத சோகத்தில் இருக்கின்றனர்.அரசு மின்சாரம் கொடுக்காத இந்த சூழலில்,மாற்று முறையில் தீர்வு கண்டது நமக்குள் பல சிந்தனைகளை உருவாக்குகிறது.அரசின் பாரா முகம்,எப்போது இது போன்ற ஏழைகளை நோக்கி திரும்பும்,என்று தெரியவில்லை.அரசிடம் இருந்து அனைத்து அடிப்படை உதவிகளையும் பெற்று தந்தே தீருவது என்று 
முனைப்போடு செயல் படுகிறார்.''திருவள்ளுவர் மாவட்ட தலைமை பொறுப்பாளர் தோழர் மோகன் அவர்கள் .


அதே சமயம் சூரிய ஒளி கொண்டு ஏன்,மற்ற மின் பற்றாக்குறை பகுதிகளை ஒளிரச் செய்யக்கூடாது.அணு உலை தான் தீர்வு என்பதற்கு மாற்று பதில் சொல்ல வந்த உதாரணமாகவே நாம் பார்க்கிறோம்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனை வீட்டு வேலை செய்து காப்பாற்றி வரும் ஒரு மூத்த தாய்.
   
கால் முறிந்த நிலையில் மேலும் ஒரு அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் ஒரு பெரியம்மாள்.