வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் நன்றியறிதலோடே தொடங்குகிறது.வான் தந்த வாழ்வுக்கு யாம் செய்யும் சிறு அன்பு,மண்ணில் சில விதைகளை வேரூன்றச் செய்தலே.
தாம் வாழும் சமூகத்தின் மீது பேரன்பு கொண்ட,இராமநாதபுரம் முரளி-ஈசுவரி இணையர் தம் இல்வாழ்வினை தொடங்கிய பொழுதினில்.14-02-2013. திருமண பரிசாக விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன ..
தன் வாழ்வெல்லாம் வருடிய,வதைத்த,சமூக நேய உணர்வுகளையெல்லாம் சக மனிதர்களோடும்,பத்திரிக்கைகள் வாயிலாகவும் பகிர்ந்தபடியே வந்தார் ஒரு ஆசிரியர்.
அதை படித்தவர்களும்,பகிர்ந்துகொண்டவர்களும் ஒரு இலக்கியமாக உருவானதை,ஒரு தொகுப்பாக வெளியிட ஏற்பாடு செய்தனர். அப்படி உருவானது தான் ''புகை ஒற்றன்'' என்ற நூல். இதன் படைப்பாளி ஆறு.இளங்கோவன் அவர்கள்.(இடமிருந்து இரண்டாவது)உடன் அண்ணன் பாவலர் அறிவுமதி,இயக்குனர்.வ.கௌதமன் ஆகியோர்.விருத்தாசலம் நகரில்...