"புகை ஒற்றன்' நூல் வெளியீடு
First Published : 26 Jun 2012 10:32:34 AM IST
விருத்தாசலம், ஜூன் 25: விருத்தாசலத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணிமுத்தாறு மக்கள் மன்றம் சார்பில் கவிஞர் இளங்கோவன் எழுதிய "புகை ஒற்றன்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் மணிமுத்தாறு மக்கள் மன்ற சிறப்புத் தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் அறிவுமதி நூலை வெளியிட, திரைப்பட இயக்குநர் கவுதமன், நடிகை இன்பநிலா, திருவள்ளுவர் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வீரபாண்டியன், ரமேஷ் கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர் தங்க. ஆசைத்தம்பி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் வேப்பூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமாரி வரவேற்றார். தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.பழமலய் தலைமை ஏற்றார். நீதிபதி ப.உ.செம்மல் கருத்துரை வழங்கினார்.
எழுத்தாளர்கள் வே.சபாநாயகம், கோ.தெய்வசிகாமணி, இமயம், கலைச்செல்வி, ரத்தின.புகழேந்தி, கண்மணி குணசேகரன், செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் சி.சுந்தரபாண்டியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் இளங்கோவன் ஏற்புரை வழங்கினார். இளங்குமரன் நன்றி கூறினார்.
www.dinamnai.com.
No comments:
Post a Comment