ஒரு பனை ஓலை என்பது
ஓர் இலை
ஓர் இலை என்பது
ஓர் இலை மட்டுமே அன்று
ஓலையின் ஒரு கீற்று
காற்றாடியாகலம்
ஒற்றை ஓலை ஒரு
கைவிசிறியாகலாம்
நூறு ஓலைகள்
ஒரு குடிசையாகும்
ஒரு ஓலையில்
பல பறவைகள் கூடு கட்டலாம்
பல ஓலைகள் தலையசைக்க
பனை மரம் விசிறியாகிறது
புவி கொஞ்சம் காற்று வாங்கலாம்
ஓலைகள் உரசிட
இசை பிறக்கலாம்
ஓர் உயிர் உறங்கிடலாம்
இந்த இலை
இல்லையென்றால்
எழுத்தை இழந்திருக்கலாம்
ஒரு பனை ஓலை என்பது
ஓர் இலை
ஓர் இலை என்பது
ஓர் இலை மட்டுமே அன்று ......
No comments:
Post a Comment