சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை,NH-45 இராமநத்தம்(தொழுதூர்) இல் இருந்து கிழக்காக செல்லும் பாதையில் இருக்கிறது அரங்கூர் எனும் கிராமம்.
இங்கே திரு.அருச்சுனன் என்பவர்,கடந்த மூன்று ஆண்டு காலமாக ஓர் அரிய பணியை செய்து வருகின்றார்.முன்பு மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரதுனு,தற்போது மாவட்ட ஆட்சியராக உள்ள வரும் இவரை நேரில் வந்து பணியை பாராட்டி சென்றனர்.
இறந்தோரை புதைக்கும் இடுகாட்டை,ஒரு சோலை வனமாக மாற்றி பராமரித்து வருகிறார்.பல்வேறு வகையான பழ மரங்கள் காய்த்து உள்ளது.பல வண்ண பூக்கள் அங்கே பூத்து அழகு செய்கின்றது.பார்ப்பவர் எவருக்கும் அது இடுகாடு என்ற எண்ணம் வருவதில்லை.
பெண்களும்,குழந்தைகளும் வராத சுடுகாட்டிற்கு பழம் பறிக்கவும்,பூக்கள் சேகரிக்கவும் வருகிறார்கள்.
தனது குடும்பத்திடம் தனது வருமானம் முழுக்க 'நந்தவன பணிக்காக' செலவு செய்ய ஒப்புதல் பெற்று வரும்,இவர் ஒரு உழவு வேலை செய்யும் உழைப்பாளி.
செல்வம் படைத்தவர் அல்லர்.இதில் விளையும் வாழை போன்றவை விற்று வரும் வருமானத்தை ஊர் நிர்வாகத்திடம் கொடுத்து விடுகிறார்.இதற்கு தண்ணீர் பாய்ச்சும் செலவை இவர் சொந்த செலவில் செய்கிறார்.எவரிடமும் பணம் பெறுவதில்லை.
இவரை பற்றி ஜூனியர் விகடனில் செய்தி வந்தது.10/09/2011(வடக்கு மண்டலம்)
அதையும் அவர் அறிந்திருக்கவில்லை.
தன்னை பற்றி ஒரு செய்தி வந்திருப்பது கூட அறிந்திடாத மனிதர்கள் செயலை மட்டுமே செய்கிறார்கள்,மற்றோர் செய்திகளை மட்டுமே செய்கிறோம்.
அங்கே புதைக்கப்படும் உடல்கள் வரிசையாக இடப்படுகின்றன.வேறு இட நெருக்கடி இல்லை.
ஷாஜகான் தன் மனைவி ஒருத்திக்காக ஒரு தாஜ்மகல் கட்டினார்.இந்த ஏழைகள் உறங்கும் இந்த மண்ணில் ஒரு ஏழையால் ஒரு பூஞ்செடியோ,ஒரு மரக்கன்றோ தானே நட முடியும்.அதை செய்து காட்டியதில் இந்த 'அரங்கூர் அர்ச்சுனன்' மா மன்னனாகவே திகழ்கிறார்.
No comments:
Post a Comment