யாதும் ஊரே
யாவரும் கேளிர்
யாவரும் கேளீர்
யாதும் உயிரே
ஈழக்குரல்
ஈனக்குரல் கேட்கலையோ
அக்கரை இந்தியாவிலே
ஆண்டுக்கொரு நாள் தீபாவளி
இக்கரை ஈழத்திலே
அன்றாடம் தீராவலி
எட்டி பார்த்துக்கொள்வோம்
எதிர் வீட்டை ஜன்னல் வழியே
இப்போது எட்டும் தூரம்
வீடே இல்லை
'எலி வளைனாலும் தனி வளை'
இப்ப எலியாக கூட இல்லை ....
எலி கூடவே வாழ்க்கை
நும் இராணுவச் சக்கரத்திற்கு
எம் மக்கள் மண்டையோடு
எலுமிச்சை காயாச்சு..
இத்தனைக்கும் பின் -எங்கள் உயிர்
இரக்கத்தின் மிச்சமா
இனவெறியின் எச்சமா
கதறி அழும் குழந்தைக்கு
கொடுப்பதற்கு பாலில்லை
வெடித்து அழும் வேதனையிருந்தும்
கண்களில் ஈரமில்லை
பசிக்கும் வயிருக்கு
பச்ச அரிசியாவது வேணும்
உப்பு மிளகாய் காரத்திற்கு
எங்கள் உதிரமே போதும் ..
Illuppai poongthotta kavalkara !!
ReplyDeletepoovellam un vaasamae!!
Illuppai thoppu..
vanak(valai)kaviyamaga...
vazhara,vaasam veesa......
vaasathudan vazhthukkal.