தோழர் தியாகுவின் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி.....
தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்வழி தனியார் பள்ளி இது.சென்னையின் அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் அமைந்திருக்கிறது.
நீண்ட நாள் வேட்கையின் விளைவாக நேரில் சென்றோம்.ஆலமர நிறுத்தத்தில் அருகில் அமைந்திருக்கிறது.
பொன்னிறத்தில் வள்ளுவர் வாயிலில் மின்னுகிறார்.
தலைமை ஆசிரியை நம்மை வரவேற்று,நம்மோடு உரையாடுகிறார்.
அவர் சொல்ல சொல்ல நமக்கு வியப்பு மேலிடுகிறது.அப்பள்ளியில் பணிபுரியும் அனைவரும் பெண்கள்.
ஒன்பதாவது வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது.அப்பள்ளியில் (L.K.G)மொட்டு,(U.K.G)பிஞ்சு என்று அழகாக பெயரிட்டு உள்ளனர்.
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 175 க்குள் தான் இருக்கும்.மாணவர்கள் எல்லோரும் ''வணக்கம் அய்யா''...என்று குரலேடுப்பது மிகவும் மழலையாகவும்,மாண்பாகவும் இருக்கின்றது.மிகவும் குறைந்த கட்டணமே வாங்கப்படுகிறது.இப்பள்ளியில் படிக்க வைப்பதற்காகவே,
இப்பகுதிக்கு குடி பெயர்ந்த உணர்வாளர்களும் உண்டு.
இதில் பணி செய்யும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அப்பள்ளியிலே படிக்கிறார்கள்.
அந்த ஆசிரியர்களும் மிக மிக குறைந்த கட்டணத்திலேயே பணி புரிகின்றனர்.மாணவர்கள் எல்லோரும் ஆசிரியர்களை ''அத்தை'' என்றே அன்போடு அழைக்கிறார்கள்.
தமிழ் வழிப் பள்ளிகளுக்கு இலவயமாக பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று அரசு ஆணை உள்ளது.ஆனால் சமச்சீர் நூல் இதுவரை உண்டு,இல்லை அல்லது என்று வரவேண்டும் என்று கூட சொல்லாமல் இழுத்து,அலை கழித்து வருவதாக வருத்தமுற்றர்கள்.
சமச்சீர் கல்விக்கு முன்னோடி பள்ளியை பார்த்த மகிழ்வில் விடைபெற்றோம்.