Wednesday, November 24, 2010

நிழற்ப்பட நினைவுகள்

நிழற்ப்பட நினைவுகள்


முழுகாத Ship,
Friendship என்றாலும் 
நண்பர்கள் மூழ்குகிறார்கள்... ....நினைவுகளில் 

புதுக்கண்ணாடி வாங்கியதும் 
முகத்தை பார்ப்பது போன்று 
ஒவ்வொருவரும் தன் பழைய முகத்தை 
ஆசையாய் பார்த்துக் கொள்கிறார்கள் 

சந்தித்து கொள்ள முடியாத பலரும் 
சந்தித்து கொள்ள விரும்பாத சிலரும்
இங்கே வந்து பேசிக்கொள்கிறார்கள்
மௌனமாய்..........

அவன் வைத்துக்கொண்ட அழகு மீசை,கண்ணை பாரு 
அவள் முதன் முதலாய் கட்டிய புடவை ,கலர் சுடிதார் 
என்று நினைவு நாடாக்கள் அவிழ்ந்து கொள்கிறது 

அன்று தோளருகே
இன்று தொடர்பில் இல்லாமல்

'தபு' வுக்காகவும் ,ஏ.ஆர் .ரகுமானுக்காகவும்
'காதல் தேசம்' படம் பார்க்க சென்று
வினித் -அப்பாஸ்,நட்பை பேசிய படி
கைக்கோர்த்து வந்தோம்

படத்தில் தெரிவது உருவங்கள் அல்ல ..உறவுகள் 

இருக்கின்ற முகங்களுக்கிடையே
இல்லாத முகங்களையே 
தேடுகிறது நட்பு கொண்ட மனது

பலர் கலைந்து போன காலத்தை
கடந்து போய் தொடுகிறார்கள் ..
சிலர் தொலைத்துவிட்ட
நட்பையோ,காதலையோ தேடுகிறார்கள் 

படம் பழைய Film என்றாலும் 
நினைவுகள் புதிய Print போட்டுக்கொள்கிறது 

ஒரு நிழற்ப்படத்தை
ஒருவர் பதிவேற்றம்(upload) செய்துவிட 
ஒவ்வொருவரும் பல நூறு நினைவுகளை
பதிவிறக்கம்(download) செய்துக்கொள்கிறார்கள்......... 



Friday, November 19, 2010

பின்னிருக்கையும் பேச்சுத்துணையும் ....








தூக்கி போட்டாலும் 
தூக்கம் கலைத்தாலும்
முன்னிருக்கைகள் காலியான போதும்
பின்னிருக்கையே பிடித்திருக்கின்றது 
பேருந்து பயணத்தின் போது 

முன் பின் தெரியாதவரோடு 
பேச முடியாவிட்டாலும் 
அகத்தோடு அகம் மலர முடியாத போதும்



பின்னந்தலைகளின்
முன்பக்க 
கற்பனை முகங்களிடம் பேசியபடியே 
முடிகிறது பேருந்து பயணம் ..