Saturday, August 21, 2010

..''இனிப்பு இல்லாத ஊருக்கு இலுப்பை பூ தான் சக்கரை''



வணக்கம் ..

தோப்புக்குள் நிழலிருக்கு 
இளைப்பாறலாம் 
இலுப்பை மர மடியில் 

பழைய மரம்
அதே காற்று
சொந்த நிழல்
எனினும் 
அலுக்கவில்லை
அதே வாழ்கை.

அன்று பிறந்த
இன்றும் சுமக்கும் 
உடலும் உணர்ச்சியும் 
மாற்றமில்லை

கண்ணாடிகளை மாற்றினாலும் 
அதே பிம்பம் 


இலுப்பை பழம் தின்ன 
இரவில் வரும் வவ்வால்கள் 
பகலில் வரும் குழந்தைகள்


பசிக்கும்போது தானே 
அவரவர் வருவார்கள்